கெர்பர், சிபுல்கோவா அரையிறுதியில்
2016-10-28 13:35:59 | General

சிங்கப்பூரில் நடந்துவரும் பெண்கள் டெனிஸ் சம்பியன்ஷிப் போட்டியில் கெர்பர், சிபுல்கோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.


முதல்   8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள சர்வதேச பெண்கள் டெனிஸ் சம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

இதில் சிவப்பு பிரிவில் நேற்று முன்தினம் கடைசி லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் "நம்பர் வன் புயல்' ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 63, 63 என்ற நேர் செட்டில் மேடிசன் கீஸை (அமெரிக்கா) வீழ்த்தினார். 


முன்னதாக மற்றொரு ஆட்டத்தில் டொமினிகா சிபுல்கோவா (சுலோவாக்கியா) 63, 76 (5) என்ற நேர் செட்டில் சிமோனா ஹாலெப்புக்கு (ருமேனியா) அதிர்ச்சியளித்தார்.


தான் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்த ஏஞ்சலிக் கெர்பர், சிவப்பு பிரிவில் முதலிடத்தைப் பிடித்து கம்பீரமாக அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறார். சிபுல்கோவா, மேடிசன் கீஸ், ஹாலெப் தலா ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலை வகித்தனர். 


இதையடுத்து வென்ற, விட்டுக்கொடுத்த செட்டுகளின் அடிப்படையில் மற்ற இருவரையும் ஓரங்கட்டிய சிபுல்கோவா(3 செட் வெற்றி, 4 செட் இழப்பு) அரையிறுதி வாய்ப்பை தட்டிச் சென்றார். 


ஹாலெப், கீஸ் 2 செட்டுகளை வென்று, 4 செட்டுகளை பறிகொடுத்திருக்கிறார்கள். கெர்பர் தனது கடைசி லீக்கில் நேர் செட்டில் வென்றதாலேயே சிபுல்கோவாவுக்கு அரையிறுதி அதிர்ஷ்டம் கிட்டியது குறிப்பிடத்தக்கது.

 

TOTAL VIEWS : 401
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
f9qgu
  PLEASE ENTER CAPTA VALUE.