"முகாமுக்குள் முடங்காது இராணுவம்"
2017-08-14 09:41:34 | General

வடக்கில் நிகழும் எந்தவொரு தாக்குதலுக்கும் புலி முத்திரையைப் பயன்படுத்த வேண்டாமெனவும் அவ்வாறு புலிகளின் அச்சுறுத்தல் வடக்கில் இல்லையென்றும்  கூறியுள்ள புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க, எவ்வாறாயினும் வடக்கில் இராணுவம் முகாம்களுக்குள் முடங்கியிருக்காது எனவும் வழமையான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் நிகழும் எந்தவொரு தாக்குதல் சம்பவத்துக்காகவும் எல்.ரி.ரி.ஈ. லேபிலே பயன்படுத்தப்படுகிறது. இது முற்றிலும் தவறாகக் கூறப்படும் தகவல்.

இவ்வாறான தாக்குதல்களை வடக்கில் நடத்தும்  சட்டத்தை மதியாத சில குழுவினரே இவ்வாறு புலி லேபலை பயன்படுத்துகிறார்கள். அவர்களால் இடையிடையே மேற்கொள்ளப்படும் தாக்குதல் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையாது.


ஒவ்வொரு சம்பவத்துக்காகவும் இப்படி எல்.ரி.ரி.ஈ. என்ற சொல் கூறப்படுவதை நான் விரும்பவில்லை. எனது கருத்து அவ்வாறு புலிகளின் பெயரைச் சம்பந்தப்படுத்துவது வெகு இலகுவானது என்ப÷. ஆனால் அது உண்மைக்கு மிகவும் புறம்பானது. வடக்கில் இவ்வாறு சட்டத்தை மதியாது செயற்படும் ஏனைய குழுக்களும் உள்ளன. ஆவா என்பது எல்.ரி.ரி.ஈ. இல்லை.

இவர்கள் தெற்கிலும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட  வேறு தரப்புகளுடன் சேர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றார்கள். இவர்கள் ஒரு குழுவையோ அல்லது இன்னொரு குழுவையோ சேர்ந்தவர்கள் எனக் கூற முடியாது. அவ்வாறே 1971   1981 காலத்து குழுவினருடன் தொடர்புடையவர்களும் இல்லை.


நாம் இதுவரையில் 12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் சேர்த்துள்ளோம். அவர்களில் ஒருவர் எதனையாவது செய்தால் அந்த 12,000 பேருமே ஆயுதம் எடுத்து நாளை காலை போரைத் தொடங்கப் போகிறார்கள் என்று கருத முடியாது. அவ்வாறு நடப்பதற்கு அடிப்படையான நிலைமைகளைக் கண்காணிக்காமல் நாம் தூங்கிக் கொண்டிருக்கவில்லை.

வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு இராணுவப் பிரிவுகள் பாதுகாப்புக் கடமையில் உள்ளன. வடக்கைப் பொறுத்தவரையில் இராணுவம் முகாம்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

அவர்கள் பாதுகாப்புக் கடமைகளுக்காக வெளியே ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு வடக்கின் பாதுகாப்பு நிலைமைகளைப் பற்றி விபரித்துக் கூறியுள்ளார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க. 

TOTAL VIEWS : 1110
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
bgru6
  PLEASE ENTER CAPTA VALUE.