திருமலையில் பழுதடைந்த நிலையில் சடலம் மீட்பு
2017-08-12 13:17:02 | General

திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியரசன் குளத்தில் அடையாளம் காணமுடியாத ஒருவரின் சடலத்தின் ஒரு பகுதி இன்று காலை கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியரசன்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள மணியரசன்குளம் என்று கூறப்படுகின்ற சிறிய குளத்திலேயே இந்த உடலின் கீழ்ப்பகுதி பொலிஸாரினால் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 தினங்களுக்கு முன்னர் மாடு மேய்ப்பாதற்காகச் சென்ற அதே பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதையுடைய ஆண் ஒருவர் இன்னும் வீடு திரும்பவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இவ்வுடளின் இப்பகுதி சில வேளை அவரின் உடலின் பகுதியாக இருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

TOTAL VIEWS : 387
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gcy5l
  PLEASE ENTER CAPTA VALUE.