இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம் 
2017-12-04 12:37:29 | Leftinraj

கனடாவில் வசித்து வந்த தமிழ் குடும்பம் ஒன்று புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில்  இலங்கைக்கு  திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

நேற்று மாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

லோரன்ஸ் என்பவரை தலைவராக கொண்ட இந்தக் குடும்பத்தினர்இ மனிதாபிமான அடிப்படையில் கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர்.

எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்தேஇ இலங்கைக்கு  திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

போரின் போது கிழக்கு மாகாணத்தில் ஐ.நா அமைப்புக்காக பணியாற்றிய லோரன்ஸ்  2012ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் கனடாவில் தஞ்சமடைந்திருந்தார்.

எனினும் கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை மறுக்கப்பட்டதை அடுத்தேஇ இவரது குடும்பத்தினர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

TOTAL VIEWS : 945
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
b5lat
  PLEASE ENTER CAPTA VALUE.