வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு
2017-11-17 14:04:36 | General

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று இன்று நுவரெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

ஹாவாஎலிய பகுதியில் அமைந்துள்ள மின்சார சபைக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து இந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் நுவரெலியா ஹாவாஎலிய கெமுனு மாவத்தை பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான பெரியசாமி சியாமலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் இப்பகுதியிலுள்ள பிரதேசவாசிகள் நுவரெலியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து காலை 11 மணியளவில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இவ்வாறு சடலத்தை மீட்டுள்ளனர்.

TOTAL VIEWS : 427
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
oqy8j
  PLEASE ENTER CAPTA VALUE.