போலி ரிக்கெட் விற்றவர் கைது 
2017-10-17 16:25:04 | Leftinraj

போலியாக அச்சிடப்பட்ட ஜயோதா மற்றும் சங்வர்த்தன லொத்தர் போன்ற சீட்டிழுப்பு டிக்கட்டுக்களை  விற்பனை செய்த நபர் ஒருவர் உடபுஸ்ஸல்லாவ நகரில் திங்கட்கிழமை மாலை உடபுஸ்ஸல்லாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கண்டி மெனிக்கின்ன பிரதேசத்தை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் சீட்டிழுப்பு இலக்கங்கள் முடிவடைந்த டிக்கட்டுக்களின் இலக்கங்களை போலியாக அச்சிட்டு உடபுஸ்ஸல்லாவ நகரில் விற்பனை செய்து வந்துள்ளார்.

உடபுஸ்ஸல்லாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸார் குறித்த நபரை சுற்றிவளைத்து 16.10.2017 திங்கட்கிழமை மாலை கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3629 ஜயோதா மற்றும் சங்வர்த்தன லொத்தர் டிக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணைகளுக்குட்படுத்திய பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் நடவடிக்கைகளை உடபுஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

TOTAL VIEWS : 420
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
0fuym
  PLEASE ENTER CAPTA VALUE.