வரவு  செலவுத் திட்டம் 2018 மீதான வாசிப்பு
2017-11-09 15:21:28 | General
 1. 2018ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத்திட்ட உரை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வாசிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.​
 2. அரச வருமானம் 20 வீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு
 3. 2018 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் 'எண்டர்பிரைஸ் பட்ஜெட்' என்று நிதியமைச்சர் பெயரிட்டுள்ளார்.
 4. கடைகள் மற்றும் அலுவலகங்கள் சட்டங்கள்  திருத்தப்பட்ட வேண்டும்.
 5. ​பொருளாதார வளர்ச்சி 5%, பணவீக்கம் 6%மாக இருக்கும் வகையில் நடவடிக்கை
 6. 2040 ஆம் ஆண்டளவில், பெற்றோலியம் அல்லாத சக்திகளில் இயங்கும் வாகனங்களாக மாற்றப்படும்.
 7. இலத்திரனியல் முச்சக்கரவண்டிகள், பஸ்கள் மற்றும் மற்றைய வாகனங்களுக்கு, இறக்குமதி வரிகள் தளர்த்தப்படும்.
 8. மின்சார கார்களின் இறக்குமதி வரி குறைந்தபட்சம்,  ஒரு மில்லியன் ரூபாய் குறைக்கப்படும்
 9. ஆடம்பர கார்கள் மீது ஒரு சிறப்பு வரி விதிக்கப்படும்
 10. இலங்கை போக்குவரத்து சபைக்கு, 50 மின்சார பஸ்களை கொள்வனவு செய்ய 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
 11. தற்போதுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு, அவர்களுடைய முச்சக்கரவண்டிகளை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு காலஅவகாசம் வழங்கப்படும.
 12. பிளாஸ்டிக் பொருட்கள் மீதான வரி விதிக்கப்படும்
 13. நாடளாவிய ரீதியில், மின்சார சார்ஜ்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
 14. தற்போது பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டிகளை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்
 15. தெஹிவளை மிருககாட்சி சாலை மற்றும் மற்றயை மிருக காட்சிசாலை அனைத்தும், திறந்தவௌியா மாற்றப்படும்.
 16. கல்கிசையிலிருந்து இரத்மலானை வரையிலான கரையோர பாதுகாப்புத் திட்டத்துக்கு, 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
 17. மின்சார வாகன விலை 10 லட்சம் ரூபா குறைப்பு, சொகுசு வாகன விலை 25 லட்சம் ரூபா அதிகரிப்பு, முச்சக்கர வண்டி விலை 50,000 ரூபா அதிகரிப்பு
 18. சிறிய மற்றும் நடுத்தர குளங்களை புனரமைப்பதற்கு, 1000 மில்லியன் ரூபாய்.
 19. கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில், விவசாயத்தை  மேம்படுத்துவதற்காக, களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்படும்.
 20. கடலட்டை வளர்ப்புக்காக, கிளிநொச்சி பூநகரியில் விசேட திட்டம் முன்னெடுக்கப்படும்.
 21. மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்மாதிரியான, நீர்வாழ் உயிரியல் பூங்காவுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். 
 22. சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு 10 சதவீத நிவாரணம்.
 23. சுயதொழில் புரிவோருக்கான கடன் திட்டத்துக்கு, 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
 24. நெல் உட்பட 6 தானிய பயிர்ச் செய்கைகளுக்கு 40,000 ரூபா வரை காப்புறுதி முறை அறிமுகம்
 25. இன்னும் ஐந்து வருடங்களில், இலங்கையில் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிப்பதற்கு 3 பில்லியன் ஒதுக்கீடு.
 26. விசேட தேவையுடைய நபர்களால் முன்னெடுக்கப்படும்.  வர்த்தக நடவடிக்கைகளுக்காக வரி நிவாரணம். 
 27. காலநிலை அவதான நிலையத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தரவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளப்படும்
 28. தெரிவு செய்யப்பட்ட விவசாய உபகரணங்களுக்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி நீக்கம்
 29. மசாலா பொருட்களின் தரநிலைகளை உறுதிப்படுத்துவதற்கு, கடுமையான சட்டங்கள் செயற்படுத்தப்படும்.
 30. அன்னாசி, வாழைப்பழத்தின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு, விசேட ஆராய்ச்சி நிலையம்.
 31. சிலாபம், மிரிஸ்ஸ, காரைநகர், பூரனாவெல்ல மீன்பிடித்துறைமுகங்களை புனரமைப்பதற்கு, 1750 மில்லியன் ரூபாய்.
 32. அனைத்து சுற்றுலாத்துறை சேவை வழங்குநர்களையும் இலங்கை சுற்றுலாத்துறை சபையின் கீழ் பதிவு செய்யுமாறு வலியுறுத்தல்
 33. சுற்றுலாத் துறைக்கு தேவையான சில குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மீது சுமத்தப்படும் கட்டணத் தீர்வுகள் அகற்றப்படும்
 34. கோட்டை, நானுஓயா மற்றும் எல்ல ஆகிய புகையிரத நிலையங்கள், தொல்பொருள் இடங்களாக பிரகடனம்
 35. வாகன நெரிசலற்ற வீதிகளில் ஓடும் இலத்திரனியல் வாகனங்களுக்கு வரிக் குறைப்பு.
 36. ஐந்து வருடங்களுக்கு குறைந்த வாகனங்களுக்கு புதிய காபன் வரி
 37. வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வைத்திருப்போரிடமிருந்து, அனைத்து விமானநிலைங்கள் மற்றும் துறைமுகங்களில், அறவிடப்படும் வரியை மீள்பெறும் திட்டம் 2018 மே மாதம் 1ஆம் திகதி முதல், செயற்படுத்தப்படும்.
 38. முச்சக்கரவண்டி அதிகாரசபை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அது, போக்குவரத்து அமைச்சின் கீழ்​ கொண்டுவரப்படும்.
 39. இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு சிறப்பு வங்கி ஆரம்பம்
 40. முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விகளில் முதலீடுகள்.
 41. ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்தின் உதவியுடன், புதிய ஐந்து தொழிற்பயிற்சி நிலையங்கள் நிர்மாணிக்கப்படும்.
 42. உள்நாட்டு வர்த்தகர்களைப் பாதுகாக்க சில வெளிநாட்டு வர்த்தகங்களுக்குக் கட்டுப்பாடு
 43. யாழ். வளாகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்துக்கு, புதிய நூலகம்
 44. மரபியல், ரோபோட்டிக்ஸ் மற்றும் நனோ தொழில்நுட்பங்கள், பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்படும்.
 45. ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை அதிகரிக்க ரூ 750 மில்லியன் ஒதுக்கீடு.
 46. முச்சக்கர வண்டு சாரதிகளுக்கு சுற்றுலா வழிகாட்டிப் பயிற்சி மற்றும் அதிகாரசபை அமைப்பு
 47. மஹாபொல புலமைப்பரிசிலுக்கு, வருடாந்தம் ஒதுக்கப்பட்ட 300,000 ரூபாய் 500,000ரூபாயாக அதிகரிக்கப்படுவதோடு, 3,000 கூடுதல் மாணவர்கள் புலமைப்பரில்களைப் பெற்றுக்கொள்வர்,
 48. விளையாட்டு காலணிகளில் இறக்குமதி வரி நீக்கப்படும்.
 49. சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
 50. குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஒரு சதவீத சீனியின் அளவுக்கு 50 சதம். வரி.இன்று இரவிலிருந்து அமுலில்.
 51. எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் ​நோய் அறிகுறிகளை, ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிப்பதற்கு, 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடு
 52. மதுபானத்தின் மீது, தேசியத்தைக் கட்டியெழுப்பும் வரி 2018 ஏப்ரல் 1ஆம் முதல் அறவிப்படும்.
 53. 1200 பொருட்களின் மேலதிக இறக்குமதி வரி நீக்கம்
 54. வடக்கில் இடம்பெயர்தோருக்காக ஆரம்பிக்கபட்டுள்ள வீடமைப்புத்திட்டத்துக்கு, 3000 மில்லியன் ஒதுக்கீடு
 55. லயன் திட்டங்களை ஒழித்து 25,000 வீடுகளை அமைக்கும்  மத்தியத்திட்டத்துக்கு 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
 56. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை, 20,000 வீடுகளைக் கொண்ட தொகுதி, 2020இல் நிர்மாணிக்கப்படும்.
 57. அமைதிப்படைக்கு, இலங்கையில் இருந்து அனுப்பப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்குமாறு, ஐ.நா கோரியுள்ளது. அதில் பங்கேற்கும் இராணுவத்துக்கு பயிற்சியளிப்பதற்கு 750 மில்.ஒதுக்கீடு
 58. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 50,000 ​செங்கல் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.
 59. வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணத்தில், கடன் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்களுக்கு, சிறிய வட்டியினாலான கடன் வசதிகள் வழங்குவதற்கு, 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
 60. தம்புளை மற்றும்  கொழும்புடன் இணைக்கப்பட்ட நவீன​ பொருளதார மையமொன்று, யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவுள்ளது
 61. காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கு 1.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
 62. 2018ஆம் ஆண்டுக்குள்,   1.9 டிரில்லியன் ரூபாய் கடன் செலுத்தப்படவேண்டும்
 63. வங்கிப் பரிமாற்றல்களுக்காக 1000 ரூபாய்க்கு 20 சதம் வரி அறவிடப்படும்
 64. உள்நாட்டு அல்லாத வெளிநாட்டு மதுபானங்களுக்கு வரி
 65. குறுந்தகவல் மூலம் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு வரி அறவிடப்படும்
 66. 2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாசிப்பை, அமைச்சர்  மங்கள சமரவீர முடித்துக்கொண்டார்
TOTAL VIEWS : 727
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
whu3r
  PLEASE ENTER CAPTA VALUE.