வட மாகாண சபையில்
2017-04-07 10:37:50 | General

-த.வினோயித்-

வட மாகாணசபையின் 90வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் ஆரம்பமான அமர்வு அமைதியாக தொடங்கியது.; சுகயீனம் காரணமாக கடந்த அமர்வில் அவைத் தலைவர் சபைக்கு வரவில்லை. இதனால்; ஏற்பட்ட குழப்பம் நேற்றைய அமர்வில் கருத்திற்கொள்ளப்பட்டது.

தொடக்கத்திலேயே அவைத் தலைவர் மற்றும் பிரதி அவை தலைவர் சபையில் இல்லாத சமயங்களில் அவையை தலைமை தாங்கும் பொறுப்பு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோருக்கு  வழங்கப்பட்டது. 

தொடர்ந்து வடமாகாண சபை 355 தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றுக்கு நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாக பெருமிதமாக கூறிய அவைத் தலைவர் மாகாண சபை என்ன செய்திருக்கிறது? என எவரும் கேட்க கூடாது எனவும் கடிந்து கொண்டார். 

அடுத்து நியதிச்சட்டங்களை அவைத் தலைவர் தனது கைக்குள் வைத்து கொண்டு நிறைவேற்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பாகவும் அவை தலைவர் கடிந்து கொண்டார். 

மேலும் மாகாண சபையை சில்லறை கடையாக கருத வேண்டாம் எனவும் அவர் கேட்டு கொண்டார். 

அடுத்த கட்டமாக வட மாகாண நீதிமன்ற குற்றப் பணம் மற்றும் தண்டப்பணம் கைமாற்று நியதிச்சட்டம் மற்றும் வடமாகாண சுற்றுலா அதிகார சபை நியதிச் சட்டம் ஆகியன 2ம், 3ம் வாசிப்புக்களுக்காக எடுக்கப்பட்டது. 

வடமாகாண சுற்றுலா அதிகார சபை நியதிச் சட்டம் குழுநிலை விவாதத்திற்கு எடுக்கப்பட்டபோது சுற்றாலா என்ற விடயம் மத்திய, மாகாண அரசுகளுக்கு கூட்டாக உள்ள விடயம். எனவே அது தொடர்பாக நியதிச்சட்டம் நிறைவேற்ற இயலாது என எதிர்கட்சித் 
தலைவர் கூறினார். அதனை தொடர்ந்து சபையில் குழப்பம் எழுந்தது. 

இதற்கிடையில் சிவாஜிலிங்கம் எழுந்து இந்த நியதிச்சட்டத்தை பூர்வாங்க ஆய்வுக்கு எடுத்து அதனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற்றதன் பின்னர் நிறைவேற்றலாம் என கூறினார். அதுவே தீர்மானமாக எடுக்கப்பட்டு பூர்வாங்க ஆய்வு நடந்தது. 

நியதிச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் வடமாகாண சபை என்ன செய்தது? என சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநருடன் பேசி வெற்றிடங்களை கண்டு அவற்றுக்கு பட்டதாரிகளை நியமிக்க கேட்டுள்ளோம் என அவை தலைவர் கூறினார். 

பின்னர் அந்த விவாதம் வழக்கம்போல் வேறு விடங்களுக்குள் எல்லாம் நுழைந்து பட்டதாரி ஆசிரியர்கள் விடயத்தில் வந்து நின்றது. இதன்போது உறுப்பினர் து.ரவிகரன் எழுந்து முல்
லைத்தீவு மாவட்டத்தை எல்லோரும் கைவிட்டு விட்டீர்களா? என கேள்வி எழுப்பினார். 

அது பின்னர் கிளி நொச்சியில் பாடசாலை மாணவர்கள் களவாக இளநீர் பிடுங்கிய விடத்திற்கு போய் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் வரையில் சென்று முடிந்தது. 

இடைக்கிடையில் எழுந்து சபையை ஒழுங்காக நட த்துங்கள், சபையை ஒழுங்காக நடத்துங்கள் என எதிர்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டே இருந்தர். 

அடுத்த கட்டமாக நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருந்த  முதலமைச்சரை நோக்கிய எதிர்கட்சித் தலைவரின் கேள்விகள் எடுக்கப்பட்டன. 

எதிர்க் கட்சித் தலைவர் கேட்ட கேள்விகளுக்கு அப்படி ஒன்றும் நடக்கவில்லை. எனக்கு தெரியாது. என முதலமைச்சர் வழக்கமான தோரணையில் பதிலளித்தார். எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசாவும் தனது வழங்கமான தோரணையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் தவற விட்டுவிட்டீர்கள் என சரமாரி குற்றச்சாட்டுக்க ளை முன்வைத்தார். 

இதற்கு நடுவில் எதிர்க் கட்சித் தலைவர்குற்றஞ்சாட்ட முடியாது உப கேள்விகளை கேட்கலாம் என சிவாஜிலிங்கம் கூற, கூட இல்லை நான் பேசுவேன். சபை ஒழுங்கின்படியா நடக்கிறது? என எதிர்கட்சி தலைவர் கேட்டார். 

தொடர்ந்து மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன், இரணைமடு குடிநீர் திட்டமா? ஆறுமுகம் குடிநீர் திட்டமா? என ஆராய்வதற்கு ஒரு அமர்வு நடத்தப்பட வேண்டும் என  சிவாஜிலிங்கம்  சபையில் கோரிக்கை முன்வைத்தார்.

இறுதியாக வவுனியா, மன்னார் மாவட்டங்களின் எல்லையில் 40030.525 ஹெக்ரயர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனா வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ள மையை இரத்து செய்ய கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்;டது. தொடர்ந்து அவை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

TOTAL VIEWS : 543
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
bsa2d
  PLEASE ENTER CAPTA VALUE.