ஆணைக்குழு முன்பாக அர்ஜூன் ஆஜர்
2017-09-08 09:42:10 | General

திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் (சி.ஐ.டி.) முன்பாக அர்ஜுன் அலோசியஸ் நேற்று வியாழக்கிழமை ஆஜராகியுள்ளார். 


அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆஜராகியிருந்தார்.  நேற்று முன்தினம் புதன்கிழமை  ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிணை முறி மோசடி தொடர்பான விசாரணையின் போது தொலைபேசி உரையாடல் பதிவுகள் கேட்கப்பட்டன.

அதன்போது மத்திய வங்கியிடமிருந்து அர்ஜுன் அலோசியஸ் முக்கியமான தகவலை பெற்றிருந்தமையும்  அதனை அவரின் கம்பனிக்கு கசியவிட்டிருந்தமையும் வெளிவந்திருந்தது. அர்ஜுன் அலோசியஸ் திறைசேரி பிணை முறியத்திற்கான கேள்வி மனுக் கோரல் தொடர்பாக நம்பகரமான இரகசியத் தகவலை பெற்றிருந்தமையை தொலைபேசி உரையாடல் பதிவு சுட்டிக்காட்டியிருக்கிறது.

அத்துடன் அந்தத் தருணத்தில் சக்திவாய்ந்த நண்பர் ஒருவரிடமிருந்து அர்ஜூன் அலோசியஸ் ஆலோசனையை பெற்றிருந்தமையயும் அந்த உரையாடல் வெளிப்படுத்தியது. அந்தத் தகவலை அவர் பேர்பெச்சுவல் டெசரீஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேனவிற்கு தெரிவித்திருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுனா மகேந்திரன் பதவி வகித்தார். திறைசேரி பிணை முறி மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் காலகட்டத்திலேயே அர்ஜுன் அலோசியஸின் மாமனாரான அர்ஜுனா மகேந்திரன் ஆளுநராக பதவி வகித்திருந்தார். இந்நிலையில் ஆணைக்குழு முன் அர்ஜுன் அலோசியஸை ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்தலை விடுத்திருந்தது. 


 சட்டத்தரணி விலகல்


இதேவேளை பேர்பெச்சுவல் டெசரீஸின் சட்டத்தரணி நிஹால் பெர்னாண்டோ பிணைமுறி வழக்கில் தனது கட்சிக் காரரை பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்தும் தான் வாபஸ் பெற்றுக் கொள்வதாக நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தார். இந்தத் தீர்மானத்தை பிணை முறி மோசடி குற்றச்சாட்டை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அவர் அறிவித்துள்ளார். 

TOTAL VIEWS : 831
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
3ohcp
  PLEASE ENTER CAPTA VALUE.