அச்சுவேலியில் நிலம் தாழிறங்குவதற்கான காரணங்களைக் கண்டறிய தீர்மானம்
2016-11-24 16:39:43 | General

யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் நிலம் தாழிறங்குவதற்கான காரணங்களைக் கண்டறிவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


குறித்த நிலப் பகுதியை எதிர்காலத்தில் பயன்படுத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான  கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின்  மூலம் இதற்கான ஆய்வினை மேற்கொள்வது தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

TOTAL VIEWS : 2345
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
jeb9m
  PLEASE ENTER CAPTA VALUE.