இருண்ட யுகத்திற்கு நாடு செல்கிறது
2017-07-07 09:36:15 | General

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் கொள்கைகளும், தீர்மானங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணாக இருப்பதால் நாட்டுக்கு எந்தவிதப் பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;


நாட்டின் பொருளாதாரம் அடியோடு சிதைக்கப்பட்டுவிட்டது. நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு புதிய அரசமைப்பைக் கொண்டுவர முயற்சி நடக்கிறது. 


அரச சொத்துகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. நாட்டில் இலட்சக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் போது இந்தியாவிலிருந்து வேலைக்கு ஆட்களைத் தருவிக்கப் பார்க்கிறார்கள். 


நாட்டை யுத்தத்திலிருந்து மீட்டெடுத்த வீரர்களும் வீராங்கனைகளும் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். நாட்டில் நிறைய தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். 


அவர்களை அடையாளம் கண்டுகொள்ள பொதுமக்கள் திணறுகிறார்கள். உண்மையான தலைவர் யார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. 


அமைச்சரவைப் பேச்சாளர்களாக மூவர் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரின் நோக்கங்களும் வெவ்வேறாக உள்ளன. 


நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகமொன்றை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார். 

 

TOTAL VIEWS : 1209
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
t3oxf
  PLEASE ENTER CAPTA VALUE.