புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமையும்; 9, 10 ஆம் திகதிகளில் முடிவு?
2016-12-05 12:12:11 | General

புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமையும் என்பது எதிர்வரும் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் பெரும்பாலும் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. 


புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறு உப குழுக்களினதும் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வழிநடத்தல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உள்ளடக்கம் தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. 


இதற்கமைய புதிய அரசியலமைப்பு எவ்வாறான விடயங்களை உள்ளடக்கியிருக்கும் என்பது தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் பெரும்பாலும் முடிவெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. 


இதேவேளை புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சி முறையை கொண்டிருப்பதுடன் பௌத்தததிற்கான தற்போதைய விசேட அந்தஸ்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டதென தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டதும் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற வேண்டியிருக்கும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்புக்கும் விடப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 

TOTAL VIEWS : 460
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
0bfap
  PLEASE ENTER CAPTA VALUE.