கண்டபடி பேச வட மாகாண சபை ஒன்றும் சில்லைறக் கடை இல்லை
2017-04-07 10:31:13 | General

வட மாகாண சபையை சில்லறைக் கடையாக கருதிக் காண்டு யாரும் பேசக் கூடாது என நேற்று சபையில் வைத்து காட்டமாகத் தெரிவித்தார் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்.

வடமாகாண சபை நியதி சட்டங்களை நிறைவேற்றவில்லை. அவை தலைவர் நியதி சட்டங்களை நிறைவேற்ற தடையாக உள்ளார் என அர்த்தப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துக் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவைத் தலைவர், இது குறித்து கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

என்னுடைய கைகளில் ஆறு நியதி சட்டங்கள் தான் தற்போது உள்ளன. ஏனையவை ஏற்கவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இதிலும் ஐந்து நியதி சட்டங்கள் முதலாம் வாசிப்பு முடிவுற்றுள்ளது.

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நியதிச்சட்டம், வடக்கு மாகாண நகை அடகு பிடிப்போர் நியதி சட்டம், வடக்கு மாகாண கனியவள நியதிச்சட்டம், நீதிமன்ற தண்டப்பணம் கைமாற்றல் நியதி சட்டம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு நியதி சட்டம், கூட்டுறவு அபிவிருத்தி நியதிச்சட்டம், ஆகிய நியதி சட்டங்களே தற்போது எனது கைகளில் உள்ளன. இதனை விட எந்த நியதி சட்டங்களும் எனது கைகளில் இல்லை.

நியதி சட்டம் உருவாக்குவது என்பது இலகுவான காரியமல்ல. பாராளுமன்றத்துக்கு ஒப்பான விடயங்களையே மாகாண சபையும் கையாள்கின்றது.  ஆகவே இந்த விடயத்தை முழுமையாக அறிந்துகொள்ளாமல் குற்றம் சாட்டுவதனை நிறுத்த வேண்டும் எனவும் அவைத் தலைவர் கோரிக்கை விடுத்தார்

TOTAL VIEWS : 233
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
osp0l
  PLEASE ENTER CAPTA VALUE.