302 வரிச் சலுகைகள் நீக்கப்பட்டன
2017-09-08 10:03:01 | General

பா.கிருபாகரன், டிட்டோகுகன்


நடைமுறையிலிருந்த உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் காணப்பட்ட வரிச் சலுகைகளில் 302 சலுகைகள் புதிய சட்டமூலத்தினூடாக நீக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. எம்.பி.யான சுனில் ஹந்துன்நெத்தி நேற்று வியாழக்
கிழமை சபையில் சுட்டிக்காட்டினார்.

 
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுனில் ஹந்துன்நெத்தி இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். 


2006 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க இறைவரி திருத்தச் சட்டத்திற்கு அமைய 218 வரிச் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இறைவரிச் சட்டம் 8 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன.

இதன்போது, ஏதேனும் ஒரு அடிப்படையில் 109 வரிச் சலுகைகள் கிடைத்துள்ளன. அதன் பிரகாரம் மொத்தமாக 32% வரிச் சலுகைகள் இருந்தன. 
எனினும், அந்த வரிச் சலுகைகளின் எண்ணிக்கையை நீங்கள் இந்த ஒட்டுமொத்த புதிய சட்டமூலத்தின் ஊடாக 25 ஆகக் குறைத்துள்ளீர்கள்.

ஆகவே, இதுவரை மக்களுக்குக் கிடைத்த 302 வரிச் சலுகைகள் இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் இல்லாமலாக்கப்பட்டுள்ளன என்று அவர் இதன்போது குறிப்பிட்டார். 


ஆகவே, கலைஞர்கள், சிரேஷ்ட பிரஜைகளின் மற்றும் வெளிநாட்டில் பணிபுரிவோர் போன்றோருக்கு இதுவரை கிடைத்து வந்த வரிச் சலுகைகள் கிடைக்கக் கூடிய வகையில் 49 திருத்தங்களும்,  அது மட்டுமல்லாது, புதிய சட்டமூலத்தின் பாதிப்பு மக்களுக்கு ஏற்படாமல் தவிர்க்கவென மேலும் 16 யோசனைகளும் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தில் உள்வாங்குவதற்காக ஜே.வி.பி.யின் சார்பில் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டினார். 


ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுவின் சார்பில் மொத்தமாக 65 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அவர் இதன்போது குறிப்பிட்டார். 
சுவாசிக்கும் அனைவரையும் வரி வலைக்குள் சிக்கவைக்கும் முயற்சியாகவே 
இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கம் இதுவாகவே அமைந்துள்ளது. இந்த நாட்டில் யாரேனும் பிறந்திருந்தால், யாரேனும் சுவாசித்தால் அவ்வாறு சுவாசிக்கும் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என் அடிப்படையிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 


அது மட்டுமல்லாது, இவ்வளவு காலமும் சாதாரண மக்களுக்கும் அதேபோல், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களுக்கும் கிடைத்த வரிச் சலுகைகள் பலவற்றையும் இந்தப் புதிய சட்டமூலத்தின் ஊடாக திருத்தம் செய்யவோ அல்லது இல்லாமல் செய்யவோ செயற்பட்டுள்ளீர்கள் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார். 


கடந்த காலத்தில் மக்களுக்குக் கிடைத்த வரிச் சலுகைகள் பல இத்திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளன. வரிச் சலுகைகள் கிடைத்த பல நிறுவனங்கள் அச்சலுகைகளிலிருந்து நீக்கப்பட்டு தற்பொழுது வரிசெலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் சேவையாற்றுபவர்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதியின் வருமானத்துக்கான வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. புண்ணிய ஸ்தலங்களை தனி நபர்களாக கருதி வரி அறவிடுவதற்கான ஏற்பாடுகள் இந்தச் சட்டத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக பௌத்த விகாரையொன்றின் வருமானத்தை குறித்த விகாரையின் தேரரின் வருமானம் எனக் கருதி வரி அறவிடுவதற்கான திட்டங்களே இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

 

TOTAL VIEWS : 1094
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
v3mts
  PLEASE ENTER CAPTA VALUE.