பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாடு கடந்த தமிழீழ அரசு
2017-09-07 11:26:32 | General

யுத்தத்தின் போதும் போர் முடிவடைந்த பின்னரும் தமிழர்களுக்கு எதிராக இலங்கை பாதுகாப்புப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை இழைத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட கருத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வரவேற்றிருக்கிறது. 


இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை அந்த அமைப்பு விடுத்திருக்கின்றது. போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லையென தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்து வந்த இலங்கை அரசாங்கங்களினால் 8 வருடங்களாக மறுப்பு தெரிவிக்கப்பட்டும் இலங்கைப் படைகளை போர்க் கதாநாயகர்களாக அழைக்கப்பட்டும் வந்த நிலையில், இலங்கைப் படைகளால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றதென்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.


"இலங்கை அரசாங்கம் முன்னாள் படைவீரர்களுக்கும் அரசாங்க சிரேஷ்ட பதவிகளை வெகுமதியாக வழங்கியுள்ளது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவை பிரேசில் தூதுவராகவும் நியமித்திருந்தமை இதில் உள்ளடங்கியிருந்தது' எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


செப்டெம்பர் 1 இல் அவரின் தலைமையின் கீழிருந்த படைகளால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் ஒப்புதல் அமைந்திருந்தது. ஜெனரல் ஜெயசூரியா போர்க்குற்றங்கள் குறித்து தன்னிடம் தகவல் இருப்பதாக கூறியுள்ளார். ஆதாரத்தை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அமைச்சர் பொன்சேகாவை அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டும் உள்ளது.


ஏனைய குற்றமிழைத்த அதிகாரிகள் தொடர்பாகவும் தன்னிடம் தகவல் இருப்பதாக அமைச்சர் பொன்சேகா கூறியுள்ளார். இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஏனையவர்களும் இந்த சர்வதேச குற்றங்களை இழைத்தவர்களை 
நீதியின் முன் முகங்கொடுக்க துரிதமாக கொண்டுவருமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த வாய்ப்பை ஐ.நா. தவறவிடக்கூடாது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

 

TOTAL VIEWS : 1176
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
g3uvl
  PLEASE ENTER CAPTA VALUE.