கேப்பாபுலவு காணி விடுவிப்பிற்கு முட்டுக்கட்டை போடும் இராணுவம்
2017-03-21 11:02:54 | Kobi

கேப்பாபுலவு காணி விடுவிப்பிற்கு 
முட்டுக்கட்டை போடும் இராணுவம் 

-சிவமோகன் எம்.பி குற்றச்சாட்டு-

கேப்பாபுலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் அரச உயர் மட்டங்கள் சாதகமான நடவடிக்கை எடுக்கின்ற போதும் இராணுவம் அதற்க்கு முட்டுக்கட்டை போட்டுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றம் சுமத்தியுள்ளார். 

கேப்பாபுலவு நில மீட்புக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அரசியல் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 
கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திப்பதற்காக வந்த அவர் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- 
கேப்பாபுலவு மக்களின் காணி மீட்பு போராடடமானது நேற்று 20 நாட்களையும் கடந்து நீடித்து செல்கின்றது, இந்த நிலையில் இந்த மக்களின்  நிலங்களை விடுவிப்பது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தலைமையகத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுடனும் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தேன்.
இந்த காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை அரச உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டிருந்தனர். 

பின்னர் நான் இங்கே உள்ள இராணுவ தரப்பின் உயர்மட்ட  அதிகாரிகளுடன் காணி விடுவிப்புத் தொடர்பாக பேசிய போது அக் காணிகளை உடனடியாக விடுவிக்கக்கூடிய ஆக்கபூர்வமான பதிலை இராணுவத்தரப்பினர் எனக்கு வழங்கவில்லை.

இதிலிருந்து ஒரு விடயம் எமக்கு தெளிவாக தெரிகின்றது. இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு எதிரானவர்களாகவே இருந்து வருகின்றார்கள், தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு இராணுவமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதும் வெளியாகின்றது. 

இந்த நாட்டில் இராணுவ ஆட்சியே மறைமுகமாக நடைபெறுகின்றது. இது ஜனநாஜக நாடு என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கின்றது. ஆனால் இங்கே இராணுவ ஆட்சி நடக்கின்றது.

எனவே இந்த விடயத்தில் இந்த அரசு உடனடியாக அரசியல் ரீதியில் இந்த இராணுவத்தை வெளியேற்றுவதற்கான உத்தரவை பிறப்பிக்கவேண்டும். நான் இந்த காணி விடுவிப்பு தொடர்பில் உண்மை நிலவரத்தை அறியவே நான் இந்த சந்திப்பை மேற்கொண்டிருந்தேன்.

சகல அரசியல் கட்சிகளும் இணைந்து இந்த கேப்பாபுலவு மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என அனைவரையும் கேட்க்கின்றேன். 

இந்த இராணுவம் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்ந்தும் சாட்டு போக்குகளை சொல்லிக் கொண்டு காலம் கடத்த விட முடியாது. மக்கள் வீதியில் இருந்து வாடி வருகின்ற பொது இராணுவமோ அந்த மக்களின் காணிகளில் வீடுகளில் உள்ள வருமானங்களை மக்களின் கண் முன்னே சூறையாடி வருகின்றது. இது மிகவும் வேதனையானது. மக்களின் நிலத்தில் இராணுவம் உல்லாச விடுதிகளை அமைத்து குதூகலம் அனுபவிக்கின்றது எனவே இந்த நிலைமாறவேண்டும் என்றார்.

TOTAL VIEWS : 322
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5qxdw
  PLEASE ENTER CAPTA VALUE.