கொக்கட்டிச்சோலையில் இளந்தாய் மர்ம மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை; இளைஞன் கைது
2017-10-10 17:10:12 | General

பட்டிருப்பு நிருபர்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் திங்கட்கிழமை மாலை பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய வீதியில் வசித்த விஜயரட்ணம் தர்மினி என்னும்  26 வயது இளந்தாயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கட்டிலில் தூங்கியவாறே உயிரிழந்த நிலையில் தனது சகோதரி காணப்பட்டதாகவும் உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்தார்.ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண் உயிரிழந்த அறையில் முகட்டு வளையில் கயிறு ஒன்று தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சகோதரியின் பாடசாலை நண்பன் ஒருவர் குறித்த வீட்டில் இருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பட்டிப்பளையைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பெண் உயிரிழந்த வீட்டுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கு நின்ற இளைஞர்களை தாக்க முற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் பெண்ணின் மரணத்துடன் தொடர்புடையதாக  சந்தேகிக்கப்படும் இளைஞரை கைது செய்யாமல் அவரை காப்பாற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டதாகவும் பிரதேச மக்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தினை பெருமளவான இளைஞர்கள் சூழ்ந்திருந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டதைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

TOTAL VIEWS : 443
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
3cepv
  PLEASE ENTER CAPTA VALUE.