பல்கலைக்கழக அனுமதிக்காக 71000 பேருக்கு மேல் விண்ணப்பம்; இம்மாத இறுதியில் வெட்டுப்புள்ளி
2017-05-16 17:39:05 | General

ந.ஜெயகாந்தன்


2016/2017 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை இம்மாத இறுதியில் வெளியிட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதன்படி கடந்த காலங்களை போல் அல்லாது 3 மாதங்களுக்கு முன்னதாகவே வெட்டுப் புள்ளிகள் வெளியாகவுள்ளன. 


2016 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதியில் வெளியானதுடன் பெப்ரவரி ஆரம்பத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 


இதன்போது முற்றுமுழுதாக இணையத்தளத்தினூடாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன்படி இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இலகுவாகியுள்ளதாகவும் இதனால் வெட்டுப்புள்ளிகளை முன் கூட்டியே வெளியிட முடியுமாக இருக்குமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் 140,000 பேருக்கும் அதிகமானோர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர் இவர்களில் 71,000 பேருக்கு மேற்பட்டோரே தமது விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறாக விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளோரில் 27,000 பேரே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

TOTAL VIEWS : 1072
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nm2zm
  PLEASE ENTER CAPTA VALUE.