கொலை தொடர்பில் ஒருவர் கைது
2016-12-05 12:02:57 | General

நீர்கொழும்பு நிருபர்


பாதாள குழுத் தலைவரின் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் ஆயுதங்களுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.


மினுவாங்கொடை பிரெடி என அழைக்கப்படும் லொக்கு ஹரம்பகே சுகன்த பிரதிப் என்பவரின் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நீர்கொழும்பு வலய சட்டத்தை வலுவூட்டும் பொலிஸ் பிரிவினர் கட்டானையில் வைத்து 3 ஆயுதங்களுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.


36 வயதான இந்தமல்கொட முதியன்சலாகே நிரன்ஜன் என்பவரையே கட்டானையில் வைத்து சட்டத்தை வலுவூட்டும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஜிஹான் மனோகர, சாஜன் ரவூப் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.


இச் சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கி ஒன்று, மி.மீ 9 வரை பிஸ்டல் ஒன்று,  ரி56 துப்பாக்கி ரவைகள் 4 என்பன கைப்பற்றப்பட்டன. இச்சந்தேகநபரை கட்டானை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

TOTAL VIEWS : 549
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vxsw7
  PLEASE ENTER CAPTA VALUE.