வலி. வடக்கில் படையினரால் மேலதிகமாக 70 ஏக்கர் காணி அபகரிப்பு
2016-12-05 12:15:29 | General

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் முகாம் அமைப்பதற்காகக் கோரிய காணியைவிட மேலதிகமாக 70 ஏக்கர் நிலத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மக்களின் காணிகள் விடுவிக்கப்படும்போது அங்கு இராணுவ முகாம் தொடர்ந்தும் இருக்குமென படையினர் தெரிவித்துள்ளனர். வலிகாமம் வடக்கில் அண்மையில் 454 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. காங்கேசன்துறை மற்றும் தையிட்டி பிரதேங்களில் உள்ள காணிகளே மக்களிடம் கையளிக்கப்பட்டன.


விடுவிக்கப்படும் காணிகளின் நடுவில் இரண்டு இராணுவ முகாம்கள் இருக்குமென படையினரால் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.


காங்கேசன்துறையில்  40 ஏக்கரில் ஒரு படைமுகாமும்  70 ஏக்கரில் மற்றுமொரு படைமுகாமுமே தொடர்ந்தும் இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.


இரு படை முகாம்களும் அளவீடு செய்யப்பட்டுள்ளன. இதன்போது படையினர் கோரிய 40 மற்றும் 70 ஏக்கரைவிட மேலதிகமாக  70 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


40 ஏக்கர் படை முகாம் 70 ஏக்கரிலும்  70 ஏக்கர் படை முகாம் 110 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பகுதிகளில் அமைந்துள்ள படை முகாம்கள் தொடர்பான  அளவுகள் படையினரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.


இருப்பினும் மாவட்டச் செயலக அளவீடுகள் இன்னமும் முடிவுறவில்லை. அவ்வாறு அளவீடுகள் முடிவுற்றதும் வேறுபாடுகள் இருப்பின் படை அதிகாரிகளிடம் இது  தொடர்பில் உரையாடப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

 

TOTAL VIEWS : 2829
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
juig1
  PLEASE ENTER CAPTA VALUE.