நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் தொடர் விசாரணை -ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது-
2017-03-21 10:40:50 | Kobi

                            -க.ஹம்சனன்-

நெடுந்தீவு பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு யாழ்.மேல் நீதிமன்றால் திகதியிடப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 03ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் பதினாறு வயதிற்கு குறைந்த ஜேசுதாசன் லக்ஸ்சினி எனும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்று முடிவடைந்தது. தொடர்ந்து சட்டமா அதிபரால் யாழ்.மேல் நீதிமன்றுக்கு இவ்வழக்கு பாரப்படுத்தப்படடது. 

இந்நிலையில் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கு விசாரனையை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தினார். வழக்கில் அரச தரப்பு சாட்சிகளாக பன்னிரன்டு பேர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். 

நேற்றைய விசாரனையின்போது எதிரிகளுக்கு குறித்த வழக்கு தொடர்பான குற்றப் பகிர்வு பத்திரம் தமிழ் மொழியில் வாசித்து காட்டப்பட்டது. குற்றப் பகிர்வு பத்திரமும் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அரச தரப்பு சாட்சியங்களை பதிவு செய்வதற்காக இவ்வழக்கில் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார். அதற்காக இவ்வழக்கின் விசாரணை எதிர்வரும் ஏப்ரல் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

TOTAL VIEWS : 317
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1yijb
  PLEASE ENTER CAPTA VALUE.