அச்சுவேலி முக்கொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் விசாரணை
2017-03-21 10:45:44 | Kobi

                          -க.ஹம்சனன்-

அச்சுவேலி முக்கொலை வழக்கு விசாரணைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது. 
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலியில் நிற்குணாநந்தன் அருள்நாயகி, அவரது மகள் யசோதரன் மதுஷா மகன் சுபாங்கன் ஆகியோரை கொலை செய்ததுடன் ஷதஜன் தர்மிகா மற்றும் தங்கவேல் யசோதரன் ஆகியோரை கொலை செய்ய முயன்றதாக பொன்ம்பலம் தனஜன் என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இவருக்கு எதிரான வழக்கு விசாரணை யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று நிறைவடைந்த நிலையில் அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து இவ்வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை  இவ்வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. 
இவ்வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தினார். வழக்கில் அரச தரப்பு சாட்சியாக 14 பேர் இணைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எதிரிக்கு நேற்று மன்றில் குற்றப் பகிர்வு பத்திரம் தமிழில் வாசித்து காட்டப்பட்டதுடன், எதிரிக்கு வழங்கப்பட்டது. 
தொடர்ந்து வழக்கின் சாட்சிகளை பதிவு செய்வதற்காக விசாரணையை இம்மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

TOTAL VIEWS : 334
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
di9lr
  PLEASE ENTER CAPTA VALUE.