யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளரின் வீடு தேடிச் சென்று கொலை அச்சுறுத்தல்
2017-03-21 10:22:51 | Kobi

                                                    -க.ஹம்சனன்-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவருக்கு கத்தியைக் காட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றிவரும் ஒருவருக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரிவுரையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் மற்றுமொரு பேராசிரிருக்கும் இதே பாணியில் அச்சுறுத்தல் விடுத்துவருவதாகவும் இருவருக்கும் தொலைபேசி ஊடாகவும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கத்தி முனையில் வீட்டுக்கு வந்து தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர் குறித்து பாதிக்கப்பட்ட விரிவுரையாளர் கடந்த 12 ஆம் திகதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் பொலிஸார் இதுவரை அச்சுறுத்தல் விடுத்தவரைக் கைது செய்யவில்லை. இது தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தரப்பில் குறிறஞ்சாட்டப்படுகிறது.
பாதிக்கப்பட்ட விரிவுரையாளர் நேற்று திங்கட்கிழமை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இணக்க சபை மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு பொலிஸ் தரப்பில் தனக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக விரிவுரையாளர் தெரிவித்தார். எனினும் பொலிஸாரின் இந்த யோசனைக்கு தான் இணங்கவில்லை எனவும் அவர் கூறினார்.

எனக்கு நேரடியாக கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன் மற்றொரு பேராசிரியருக்கும் எனக்கும் தொடர்ந்தும் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து வரும் நபர் குறித்து பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்காது இழுத்தடித்து வருவது குறித்து பாதிக்கப்பட்ட பேராசிரியர் விசனம் வெளியிட்டுள்ளார்.

TOTAL VIEWS : 48
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
yqj0e
  PLEASE ENTER CAPTA VALUE.