'20'ஐ வடக்கு நிராகரித்தது
2017-09-08 09:59:14 | General

த. வினோயித்


20வது திருத்தச் சட்ட மூலத்தை வட மாகாண சபை நேற்று வியாழக்
கிழமை முற்றாக நிராகரித்துள்ளது.


 மாகாண சபைகளுக்கு பாதகமானது என  கடுமையாக விமர்சிக்கப்பட்ட 20 வது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கவேண்டும் என பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறியிருந்த கருத்துக்களுக்கு அமைய மேற்படி 20 வது திருத்தச் சட்டத்தை இப்போதுள்ள நிலையில் நிராகரிப்பது எனவும், இப்போதுள்ளதை விட  சாதகமான முறையில்  திருத்தங்கள் செய்யப்பட்டால் பின்னர் அதுபற்றி  ஆராயலாமெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


வடமாகாண சபையின் 105 வது அமர்வு நேற்று வியாழக்கிழமை  வடமாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


 கடந்த 04 ஆம் திகதி 20 வது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் மாகாண சபையில்  நடைபெற்றிருந்தது. இதன்போது பெரும்பான்மையான உறுப்பினர்கள் மேற்படி திருத்தச் சட்டத்தை எதிர்க்கவேண்டும் என கூறியிருந்தனர். 


இந்நிலையில், 20 வது திருத்தச் சட்டம் நீதிமன்றுக்கு சென்றிருப்பதனால் அதனை அவதானித்த பின்னர் எதிர்ப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை  7 ஆம் திகதி (நேற்று) எடுக்கலாமெனத்  தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய நேற்று   நடைபெற்ற 105 வது அமர்வில் மேற்படி திருத்தச் சட்டம்  சபையில் எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில்;


 கடந்த 04 ஆம் திகதி அமர்வின் பின்னர்  மறுநாள் சில விடயங்களை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பின்னர்  6 ஆம்  திகதி ஆளுநர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதன் பிரதியை எமக்கு அனுப்பியிருக்கின்றார். அதன் பிரகாரம் புதிதாக மாற்றங்கள் வரும் என  நம்புகிறேன். எனவே நாம் இப்போது தீர்மானிக்க வேண்டுமா? என கேட்டார்.  


இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மாற்றங்கள் வருகிறபோது பார்த்துக் கொள்ளலாம். ஆனால், 20வது திருத்தச் சட்டத்தை இப்போதுள் ள நிலையில் நாங்கள் நிராகரிக்கிறோம். அதேவேளை திருத்தங்கள் செய்யப்பட்டால் அது எமக்கு அனுப்பிவைக்கப்படும். எனவே அந்த திருத்தங்கள் தொடர்பாக பின்னர் ஆராய்ந்து பார்க்கலாம் என கூறினார்.


இதே கருத்தை பெரும்பாலான  உறுப்பினர்களும் கூறிய நிலையில், 20 வது திருத்தச் சட்டத்தை இப்போதுள்ள நிலையில் நிராகரிப்பது எனவும் திருத்தங்கள் செய்யப்பட்டால் அதனை ஆராயலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 798
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
z2goa
  PLEASE ENTER CAPTA VALUE.