மலையகத்தில் மீண்டும் சீரற்ற காலநிலை பனிப்பொழிவுடன் மாலை வேளைகளில் மழை
2017-10-10 17:29:51 | General

பண்டாரவளை நிருபர்


மலையகத்தில் மீண்டும் சீரற்ற காலநிலை நிலவுவதுடன், பனிப் பொழிவுடன் மழையும் பெய்து வருகிறது.


கடந்த சில நாட்களாக மலையகத்தில் மீண்டும் சீரற்ற காலநிலை நிலவுகிறது. மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளதால் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஊவா மாகாணத்தில் பனிப் பொழிவுடன் கூடிய காலநிலை காணப்படுவதுடன், மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வெட்ட வெளிகளிலும் மலை உச்சிகள் மற்றும் மலைச் சாரல்களிலும் வேலை செய்பவர்களை அவதானமாக இருக்குமாறும் இடியுடன் கூடிய மழை பெய்யுமிடத்து மரங்களின் கீழ் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் நூறு மி.மீ. மழை பெய்யுமிடத்து பாதுகாப்பு நடவடிக்கையினை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறும் கால நிலை அவதான நிலையம் மற்றும் இடர் முகாமைத்துவ மையம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளன. 


அப்புத்தளை  கொழும்பு வீதி, கினிகத்தேனை கொழும்பு வீதி,வெலிமடை நுவரெலியா வீதி, எல்ல வெல்லவாய வீதி போன்ற வீதிகளில் பனி மூட்டம் காணப்படுவதால் வாகனம் செலுத்துவோரை மிக அவதானமாக வாகனங்ளை செலுத்துமாறும் இரவு வேளைகளில் வாகனம் செலுத்துவோர் மஞ்சள் நிற வாகன விளக்குகளை எரிய விடுமாறும் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

TOTAL VIEWS : 426
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
c4oij
  PLEASE ENTER CAPTA VALUE.