சித்திரைப் புத்தாண்டுக்குள் எங்கள் சொந்த இடம் செல்ல உதவுங்கள்
2017-04-07 10:40:18 | General

எட்டு வருடங்கள் ஏதிலிகளாய் வாழ்ந்துவிட்டோம்;. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டையாவது எமது சொந்த நிலங்களில் கொண்டாட உதவுங்கள் என கோப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது சொந்த நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் அதை விடுவித்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 38 ஆவது நாளாகப் போராடி வருகின்றனர்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இவர்கள் இரவு-பகலாகப் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கேப்பாபுலவு மக்களின் காணிகள் முதற்கட்டமாக எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த காலங்களில் பல வாக்குறுதிகளை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம். வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தைக் கைவிட நாங்கள் தயாரில்லை. எங்கள் நிலங்கள் விடுவிக்கப்படும்வரை போராட்டம் தொடரும் எனக் கூறி அந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
 
இந்நிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைவில் நல்ல முடிவை தமக்கு வழங்கவேண்டும் எனவும் போராட்டத்தில்ஈடுபடும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் கோருகின்றனர்.

TOTAL VIEWS : 2994
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
sog2s
  PLEASE ENTER CAPTA VALUE.