நீராடத் தடை செய்யப்பட்ட இடத்தில் 16 வயது மாணவன் சடலமாக மீட்பு
2017-03-20 18:03:56 | General

வத்துகாமம் நிருபர்


கண்டி ஹல்லொழுவ பிரதேசத்தில் தமது நண்பர்களுடன் மஹாவலி கங்கையில் நீராடியபோது காணாமல்போயிருந்த 16 வயது மாணவனின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. 


 கடந்த 17 ஆம் திகதி கண்டி தர்மராஜ கல்லூரிக்கும் கிங்ஸ்வூட் கல்லூரிக்கும் இடையில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வேளையில் நீராடச் சென்ற 5 மாணவர்களுள் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது நீராடத் தடை செய்யப்பட்ட ஒரு இடமாகும். இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் கண்டி தர்மராஜ கல்லூரியில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் திலந்த முதலிகே என்ற மாணவனாவார். 


இவரது மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

TOTAL VIEWS : 203
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ak7ml
  PLEASE ENTER CAPTA VALUE.