குச்சவெளி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி 
2017-08-12 10:27:09 | General

குச்சவெளி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி முன்னால் உள்ள மின் கம்பத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  குச்சவெளி பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில்  இடம் பெற்ற இவ்விபத்தில் அன்வர் முஹமட் (24) என்பவர் உயிர் இழந்துள்ளதாகவும் முஹமட் பாசீக் (22) படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர் இழந்த நபரின் சடலம் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த நபர் உயிருக்கு போராடிய நிலையில் திருகோணமலை பொது வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

TOTAL VIEWS : 234
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
b3rmw
  PLEASE ENTER CAPTA VALUE.