கிரிக்கெட் சபை தொடர்பான விவாதத்தால் சபையில் சர்ச்சை
2016-12-06 11:41:09 | General

பா.கிருபாகரன், டிட்டோகுகன்


இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அச்சபையின் தலைவர் என்ற வகையில  சபையை வழிநடத்திக்கொண்டிருந்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதிலளிக்க முற்பட்டதால் ஆளும் எதிர்த்தரப்பினர்  ஆட்சேபித்தனர்.


பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை 2017ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சின்  மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜூன ரணதுங்க, கிரிக்கெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்போர்ட்ஸ் எயிட் கட்டமைப்பு தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தார்.

குறிப்பாக இந்த கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உத்தியோகத்தர்களின் நியமனங்கள் மற்றும் இந்த அமைப்பின் அவசியம் என்ன? என்பன  போன்ற வினாக்களை தொடுத்தவாறு உரையைத் தொடர்ந்த வேளையில் குழுநிலை ஆசனத்திலிருந்து சபையை வழிநடத்திக்கொண்டிருந்த பிரதி சபாநாயகரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவருமான திலங்க சுமதிபால அந்த வினாக்களுக்கு பதிலுரைக்க ஆரம்பித்தார்.

இச்சமயத்தில் ஆசனத்திலிருந்து எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஜே.வி.பி தலைவருமான அநுர குமார திஸநாயக்க எம்.பி, சாபாநாயகரின் ஆசனத்திலிருந்து கொண்டு விவாத்தில் உரையாற்ற முடியாது. அது உகந்த விடயமல்ல. தாங்கள் உரையாற்ற வேண்டுமானால் உறுப்பினருடைய ஆசனத்திலிருந்து கருத்துக்களை 
முன்வைக்க வேண்டும். அதனைவிடுத்து சபாநாயகர் ஆசனத்தில் இருந்து கருத்துக்களை முன்வைக்க முடியாது என்றார்

அச்சமயத்தில் பதிலளித்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, நான் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியுடன் அவருக்குரிய நேரத்திலேயே பதிலுரைகளை வழங்குகின்றேன் என்றார்.


எனினும் குற்றச்சாட்டுக்களை அடுக்கியவாறிருந்த அமைச்சர் அர்ஜுனா, விவாதத்தில் உரையாற்றுவதானால் நீங்கள் உறுப்பினருடைய ஆசனத்திற்கு வரவேண்டும். சபாநாயகருக்குரிய ஆசனத்திலிருந்து பதிலளிப்பதென்பது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானது.  ஆகவே பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் தாங்கள் செயற்படவேண்டும் என்றார்.

இச்சமயத்தில் எழுந்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஸ்போர்ட்ஸ் எய்ட் நிறுவனம் தொடர்பாக அமைச்சர் அர்ஜுனா தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். கிரிக்கெட் சபையின் தலைவர் என்ற வகையில் நான் தான் பிரதி சபாநாயகரை அதற்கு பதிலளிக்குமாறு கோரினேன். உண்மையிலேயே அவர் விருந்தினருக்கான அறையில் தான் இருக்கவேண்டும் என்றார்

TOTAL VIEWS : 13595
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ewcr3
  PLEASE ENTER CAPTA VALUE.