7 இலட்சம் கோடி ரூபா கடன் சுமையில் நாடு
2017-11-14 09:48:02 | General

பா.கிருபாகரன், டிட்டோகுகன்


7000 பில்லியன் ரூபா (7 இலட்சம் கோடி ரூபா) கடன் சுமையை இலங்கை சுமக்க இரண்டு கட்சிகளுமே பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 


பாராளுமன்றில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான
 வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்; 


சுதந்திரத்திற்கு முன்னர் நாம் எவருக்கும் ஒருசதம் கூட  கடனாளியாக இருக்கவில்லை. ஆனால், இன்று 7 ஆயிரம் பில்லியன் ரூபா ( 7 இலட்சம் கோடி ரூபா) கடன் செலுத்த வேண்டியுள்ளது.

இதற்கு யார் காரணம். மாறி மாறி ஆட்சிசெய்த இரண்டு கட்சிகளுமே காரணம்.  சுதந்தரம் பெற்ற பின்னர் நாம் முகாமைத்துவம் செய்ய வேண்டியிருந்த முதலாவது விடயம் தேசிய இனப்பிரச்சினையாகும். ஆனால், நாம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதை தவிர்த்துவிட்டோம். இதன் காரணமாகவே மூன்று தசாப்தகால யுத்தம் ஏற்பட்டது. 


எனவே, புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். பிரதமர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தச் செயற்பாட்டுக்கு பாராளுமன்றின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்கும் என நம்புகிறேன். 


இந்த வரவுசெலவுத் திட்டம் இளைஞர்களை இலக்கு வைத்தது. 30வருடகால யுத்தத்தால் எமத வியாபார நடவடிக்கைகள் பாரதூரமாக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுபோனது. எதிர்ப்பார்த்த அபிவிருத்தியை அடைய முடியாதுபோனது. இளைஞர்களின் எதிர்காலத்துக்கு வழிசமைக்கும் வரவுசெலவுத் திட்டமாக இது உள்ளது என்றார். 

TOTAL VIEWS : 144
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
i6qoz
  PLEASE ENTER CAPTA VALUE.