முள்ளிவாய்க்காலில் போர்த்தடயங்களை பார்வையிட்ட பப்லோ
2017-10-12 16:11:34 | Leftinraj

முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் ஏற்பட்ட தயங்களை, ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ தலமையிலான குழு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

அவர்கள் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலய வளாகத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுக்கற்களையும் பார்வையிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐ.நா. அறிக்கையாளரிடம், தமது கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்தனர்.

போரின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்ற நிலமைகள் தொடர்பாக ஆராய ஐ.நா. அறிக்கையாளர் தலமையிலான குழு இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 200
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1zthq
  PLEASE ENTER CAPTA VALUE.