வட மாகாண சபையை விட்டு வெளியேறுகிறது தமிழரசுக் கட்சி
2017-08-07 12:56:16 | General

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில், கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை மாலை நடத்திய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நேற்று முன்தினம் மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

வட மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு முதலமைச்சருக்கு அதிகாரம் அளிப்பதற்கு இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

மேற்படி கூட்டத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர்கள் பற்றிய முடிவை தாமே எடுப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார் என்றும், தமக்கு எதிராகச் செயற்பட்ட தமிழ் அரசுக் கட்சியினரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதில்லை என்ற பிடிவாதத்தைக் காண்பித்தார் என்றும் கூறப்படுகிறது.

TOTAL VIEWS : 316
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
j4nmf
  PLEASE ENTER CAPTA VALUE.