இனவாதத்துடன் பிரிந்திருக்கும் எவரும் ஆட்சியமைக்க முடியாது; ஜனாதிபதி தெரிவிப்பு
2017-05-16 16:57:45 | General

சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு சமூக நியாயத்தை நிறைவேற்றும் அரசியல் சக்தியே எதிர்காலத்தில் ஆட்சியமைக்க முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


திங்கட்கிழமை கதுருவெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தை  திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஒரே நாட்டு மக்களாக அனைவரும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். இனவாதத்துடன் பிரிந்திருக்கும்  எவரும் ஆட்சி அமைக்க முடியாது. அனைத்து இனங்களிலுமுள்ள பிற்போக்குவாதிகள் பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்தி ஒற்றுமையின்மையை விதைக்க முயற்சியெடுக்கின்றனர்.

அனைவரும் அது தொடர்பில் நுண்ணறிவுடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டும். நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யும் போது இனம், மதம்  அல்லது கட்சிக்குரியதென்பது முக்கியமானதல்ல என்பதுடன் தேவை மட்டுமே முக்கியமானது.


நாட்டின் அபிவிருத்திக்காக அறிவும் பண்பும் நிறைந்த மக்களை உருவாக்குவதற்காக கல்வி வளர்ச்சியடைய வேண்டும். கல்வித்துறையில் பௌதீக மற்றும்  மனித வள அபிவிருத்திக்காக எந்தவொரு பின்னடைவுமின்றி தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.

 

TOTAL VIEWS : 550
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
jy2dk
  PLEASE ENTER CAPTA VALUE.