இடியுடன் கூடிய மழை பெய்யும்
2017-08-14 14:39:03 | General

இன்று நாட்டின் பல பாகங்களிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையோரங்களில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

யாழ். மாவட்டத்தில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் மழை பெய்யும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோர பகுதிகளில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் மணிக்கு சுமார் 50 தொடக்கம் 75 மில்லிமீற்றர் வரையிலான கனமழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது பலமான காற்று வீசக்கூடும், எனவே பொதுமக்கள் இடி மின்னலிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

TOTAL VIEWS : 916
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1uzuv
  PLEASE ENTER CAPTA VALUE.