பெற்றோல் நெருக்கடி நிலைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன; அமைச்சர் சரத் அமுனுகம
2017-11-14 12:24:02 | General

பெற்றோல் தொடர்பில் சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலைக்கு காரணமான விடயங்களை கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு தனது அறிக்கையை தயாரித்துள்ளது.


கண்டியில் செய்தியாளர் மத்தியில் உபகுழு அங்கத்தவர்களுக்கான தலைவரும் விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம இது தொடர்பில் தெரிவிக்கையில் ,
 

இன்னும் இரண்டொரு தினங்களில் பெற்றோலுக்கான நெருக்கடி எதுவுமில்லை. டீசலுக்கான நெருக்கடி இருக்கவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட பெற்றோல் நெருக்கடி நிலைக்கு காரணம் என்ன என்பதை கண்டறியவே நாம் முயற்சிக்கின்றோம். இதனை கண்டறிந்து நாளை ஜனாதிபதியிடம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
 
மேலும் , உண்மையான விடயங்களை மறைக்கமுடியாது. இந்த அறிக்கை பெரும்பாலும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பூரணப்படுத்தி வெளியிடும் முன்னர் இதுதொடர்பில் குறிப்பிடுவது முறையல்ல என்றும் நெருக்கடிக்கான காரணங்கள் அனைத்தையும் கண்டறிந்துள்ளோம். இதனை ஆழமாக ஆராய்ந்து அறிக்கையினை தயாரிந்துள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

TOTAL VIEWS : 200
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
psyr3
  PLEASE ENTER CAPTA VALUE.