மகிந்தவை நேரில் கடுமையாக குற்றஞ்சாட்டிய விஜயகலா; சபை அதிர்ந்தது; வாபஸ் பெறவும் மறுப்பு
2017-07-07 09:43:15 | General

பா.கிருபாகரன்


முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ முன்பாக அவர் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  முன்வைத்த நிலையில், அதனை வாபஸ் பெறுமாறு பிரதி சபாநாயகர் திலங்க  சுமதிபால விடுத்த பணிப்பை அவர் ஏற்க மறுத்ததால், அக்குற்றச்சாட்டு  பிரதி சபாநாயகரால் ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்பட்டது.


பாராளுமன்றத்தில்  நேற்று சட்ட விரோத மீன்பிடிகளை தடை செய்தல் தொடர்பான சட்டமூல விவாதத்தின்போது குறித்த விடயத்தை விடவும்  அரசியலமைப்பு திருத்தம் மகாநாயக்கர்களின் அறிவிப்பு தொடர்பிலேயே அதிகம் பேசப்பட்ட நிலையில் இச் சட்டமூலத்தில்  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றினார்.


ஏற்கனவே சபையில் நடந்த அமளி துமளியில் மகிந்த எதிரணியுடன் விஜயகலா மகேஸ்வரன் கடும் தர்க்கத்தில்  ஈடுபட்ட நிலையிலேயே சட்டமூலம் தொடர்பில் தன் உரையை  ஆரம்பித்தார்.  இதன்போது மகிந்த ஆதரவு அணி எம்.பி.க்கள் கடும் இடையூறுகளை விஜயகலாவுக்கு ஏற்படுத்தினர். இவ்வேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சபையில் இருந்தார்.


மகிந்த அணியினரின் பெரும் இடையூறுகளினால் மிகவும் கோபமடைந்த நிலையில் உரையாற்றிக் கொண்டிருந்த விஜயகலா, ஒரு கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷமீது கடுமையான குற்றச்சாட்டுகளை நேரடியாக முன்வைத்தார்.


இக் குற்றச்சாட்டை வாபஸ் பெறுமாறு அப்போது சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் பணிப்புரை விடுத்த போதும் அதனை விஜயகலா மகேஸ்வரன் நிராகரித்துவிட்டார்.


இந்நிலையில் மகிந்த ஆதரவு தரப்பு எம்.பி. ஒருவர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி இக் குற்றச்சாட்டை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரினார். இதனையடுத்து அக்குற்றச்சாட்டு ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்படுமென  பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

TOTAL VIEWS : 2248
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
yo6yb
  PLEASE ENTER CAPTA VALUE.