43 வருடங்களின் பின் ரஷ்யா செல்லும் இலங்கைத் தலைவர் மைத்திரி
2017-03-20 18:43:12 | General

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில் நாளை 22 இலிருந்து 24 ஆம் திகதி வரையுள்ள காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்கு  உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.


1974 ஆம் ஆண்டில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் பின்னர் இதுவே இலங்கையின் தலைவர்  ஒருவரினால் மேற்கொள்ளப்படவுள்ள முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாகும்.

இந்த விஜயமானது இவ்வாண்டில் இந்த  இரண்டு நாடுகளினாலும் இராஜதந்திர தொடர்புகள் நிலை நாட்டப்பட்டதன் பின்னர் கொண்டாடப்படும்  60 ஆம் ஆண்டு விழாவின் போது இடம்பெறுகின்றது.


இந்த விஜயத்தின் போது  ஜனாதிபதி சிறிசேன 2017 மார்ச் 23 ஆம் திகதியன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் இருதரப்பு சந்திப்பொன்றைச் செய்வதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு நாடுகளுக்குமிடையே வியாபாரத்தையும் முதலீட்டையும் மேலும் ஊக்குவிப்பதற்கான வழிவகையையும் உள்ளடக்கி நீண்டகால இருதரப்புத் ö தாடர்புகளில் எய்தப்பட்ட  முன்னேற்றத்தை உத்தியோகபூர்வ கலந்துரையாடல்கள் மீளாய்வு செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

TOTAL VIEWS : 355
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
pqwz8
  PLEASE ENTER CAPTA VALUE.