கல்முனையில் பெண் ஒருவரிடம்  மந்திரக் கல் கொடுத்து மயக்கி 10 பவுண் நகை கொள்ளை
2017-08-06 13:06:41 | General

கல்முனையில் வீதியால் சென்ற பெண் ஒருவரிடம் உதவி கேட்பதுபோல் நடித்து அவரிடம் மந்திரக் கல் கொடுத்து மயக்கி 10 பவுண்  தங்கநகைகளை அபகரித்துச்சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை நடைபெற்றுள்ளது. தங்கநகைகளை பறிகொடுத்தவர் பெரியநீலாவணைக் கிராமத்தைச்சேர்ந்த விஜயலக்ஸ்மி என்ற பெண்ணாவார். குறித்த பெண் கடந்த புதன்கிழமை கல்முனை ஆதாரவைத்தியசாலைக்குச் சென்று விட்டு கல்முனை பஸ் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவரின் பின்னால் சென்ற வயதான பெண் ஒருவர் தான் இரத்தினபுரியில் இருந்து வருவதாகவும் தமது கணவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தனக்கு உதவி செய்யமாறும் கேட்டுள்ளார். 

அவரின் பேச்சிலும் நடத்தையிலும் சந்தேகம் கொண்ட அப் பெண் அதனை பொருட்படுத்தாது வேகமாகச் சென்றுள்ளார். அப்போதும் பின் தொடர்ந்த வயதான பெண் உதவி கேட்டுள்ளார். இதேவேளை வீதியின் ஓரத்தில் நின்றிருந்த ஆண் ஒருவர் இவரைப்பார்த்து அந்த அம்மாவிற்கு உதவி செய்யுங்கள் பாவம் அவர் என்றிருக்கின்றார். பின்னர் மனம் இரங்கியவர் அவரோடு கதைத்துக்கொண்டு சென்றுள்ளார். 

கல்மனை இலங்கை போக்குவரத்து சாலை வீதியை நெருங்கியதும். அரை குறையாக தமிழ் பேசிய வயதான பெண் தனது கைப்பையில் இருந்து கல் ஒன்றை எடுத்து குறித்த பெண்ணிண் கையில் கொடுத்துள்ளார். அதனை பெற்றக் கொண்டதும் பெரியநீலாவணையைச் சேர்ந்த அப் பெண் தனது சுயநினைவினை இழந்துள்ளார். அதன் பின் அவர் அணிந்திருந்த தாலிக்கொடி, காப்பு, மாலை ஆகிய தங்க ஆபரணங்களை திருடிக் கொண்டு மாயமாய் மறைந்துள்ளார். 

சிறிது நேரம் கழித்து சுயநினைவுக்கு திரும்பிய குறித்த பெண் தன்னிடம் இருந்து நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளதையும், ஏமாற்றப்பட்டுள்ளதையும் அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அதன் பின் கல்முனை பொலிஸ் நிலையம் சென்று நடந்ததை முறைப்பாடு செய்துள்ளார். 

நகைகளை பறிகொடுத்த பெண்ணுடன் இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட வயதான பெண் வீதியால் பேசிவருவது போன்ற காட்சிகள் பிரதான வீதியிலுள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ;.ரி.கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆவ் வயதான பெண்ணுடன் சேர்ந்து ஒரு கும்பல் திட்டமிட்டு இவ்வாறான நுதன திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மட்டக்களப்பு நகரில் பெண் ஒருவரிடம் மந்திரக் கல் ஒன்றைக் கொடுத்து மயக்கி இவ்வாறான கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

TOTAL VIEWS : 1008
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
7votc
  PLEASE ENTER CAPTA VALUE.