கேட்க யாருமற்றவர்களாக நாம் காணாமல் போனோர் உறவுகள்
2017-04-07 10:41:57 | General

கேப்பார் யாரும் இன்றி கைவிடப்பட்டவர்களாக எங்கள் உறவுகளைத் தேடி நாங்கள் போராடிவருகிறோம் என கவலையோடு தெரிவிக்கின்றனர் முல்லைத்தீவில் ஒரு மாதத்துக்கு மேலாக போராடி வரும் காணாமல் போகச் செய்யப்பட்டோர் உறவுகள்.


காணாமல் ஆக்கப்ப்ட்டோரின்  உறவினர்கள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்தமாதம்  8ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 31 ஆவது நாளாக அவர்களது போராட்டத்ம் தீர்வின்றித் தொடர்ந்தது.

இந்த நிலையில் ஒருமாத காலத்தை கடந்துள்ள போதிலும் கேப்பார் யாரும் அற்றவர்களாக வீதியில் தமது உறவுகளின் முடிவுக்காக காத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் உறவுகள், பிள்ளைகள் பற்றிய நல்ல முடிவை கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

TOTAL VIEWS : 76
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5tqah
  PLEASE ENTER CAPTA VALUE.