'அஸ்கிரிய பீடத்தின் பச்சை இனவாதம்'
2017-07-07 09:33:21 | General

கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் பச்சையான இனவாதமே இருப்பதாக காமினி வியங்கொட தெரிவித்துள்ளார். 


கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.


அரசியலமைப்புச் சட்டத்தில் தற்போது மாற்றம் செய்யத் தேவையில்லை என அஸ்கிரிய பௌத்த பீடத்தினர் கூறியுள்ளனர். 


அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதில் கைவைக்கக் கூடாது என்று பௌத்த பிக்குகள் கூறினால் அதனை ஏற்றுக்கெ õள்ள முடியும். 


நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தை மாற்றக் கூடாது. நாட்டில் அதிகாரத்தை பரவலாக்கக் கூடாது என அவர்கள் கூறுவார்களாயின் அதன் பின்னணியில் அரசியல் நிகழ்ச்சி நிரலே உள்ளது. 


புத்தபகவான் சிங்கள பௌத்தர்களுக்கு என்று கூறி தர்மத்தை போதிக்கவில்லை. முழு உலகத்திற்கும் புத்த பகவான் தர்மத்தைப் போதித்தார். 


அத்துடன், இனம், மதம் மற்றும் ஜாதியை நிராகரிக்க வேண்டும் என பௌத்த தர்மத்தில் கூறப்பட்டுள்ளது எனவும் காமினி வியங்கொட குறிப்பிட்டுள்ளார்.

TOTAL VIEWS : 886
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
zhxj4
  PLEASE ENTER CAPTA VALUE.