கொழும்பு - தலைமன்னாருக்கு இடையிலான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது
2017-07-17 12:42:04 | General

கொழும்பு - தலைமன்னாருக்கு இடையிலான ரயில் பாதையில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதனால், அப் பாதையிலான ரயில் போக்குவரத்து இன்று முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். 

மதவாச்சி மற்றும் செட்டிக்குளத்திற்கு இடையிலுள்ள பழைய பாலத்தை நீக்கி புதிய பாலத்தை அமைக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும், எனவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதன்படி, இந்தக் காலப் பகுதியில், தலைமன்னார் ரயில் பாதையில், கொழும்பு  கோட்டை முதல் மதவாச்சி வரை ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும், மக்களது வசதி கருதி, மதவாச்சியில் இருந்து தலை மன்னார் வரை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, விஜய சமரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

TOTAL VIEWS : 738
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
m1mjx
  PLEASE ENTER CAPTA VALUE.