ஜனாதிபதிக்காக காத்திருக்கும் கூட்டமைப்பு
2017-08-14 09:35:47 | General

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டபோதும் இதுவரை  சந்திப்பிற்கான நேரம் வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்; 


புதிய அரசியலமைப்பு முயற்சியில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த விடயத்தில் தலையிட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவிருக்கிறோம்.


எனினும் ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.  ஆனால் அதற்கான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.


ஜனாதிபதியை சந்திக்கும் பொழுது வடக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் குறித்தும் எடுத்துரைப்பதற்கும் எண்ணியிருக்கிறோம்.


புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான  வழிகாட்டல் குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டும் அதனை பாராளுமன்றத்தில் இன்னமும் முன்வைக்க முடியவில்லை.


இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமது யோசனையை முன்வைக்காததால் அது தாமதமடைகின்றது. இதனை நாம் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்போம்.


விரைவில் அரசியல் அமைப்பு உருவாக்கத்தை துரிதப்படுத்துமாறு வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

TOTAL VIEWS : 933
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
lgrh5
  PLEASE ENTER CAPTA VALUE.