சுடர் ஏற்றுவதால் அச்சுறுத்தல் இல்லை
2017-05-18 10:37:35 | General

இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்ற அல்லது நினைவு கூர எவருக்கும் முடியுமென, பீல்ட் மார்ஷல், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  


டெங்கு ஒழிப்பு தொடர்பில் கம்பஹா  மஹர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வேலைத் திட்டமொன்றில் நேற்று புதன்கிழமை அவர் கலந்து கொண்டார்.  


இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு குறித்து பொன்சேகாவிடம் வினவிய போதே, அவர், இவ்வாறு  தெரிவித்தார்


சிவாஜிலிங்கம் பிரபாகரனின் இரத்த உறவினர் எனக் கூறிய போதிலும் யுத்த காலத்தில் அவ்வாறு இனங்காணப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  


மேலும், யுத்தத்தின் போது உயிரிழந்த எந்த ஒருவரையும் அவரது உறவினர்களுக்கு நினைவு கூர முடியும் எனவும் பொன்சேகா  தெரிவித்தார்.   இதற்காக தீபம் ஏற்றுதல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை.

சிவாஜிலிங்கம் பலம்மிக்க ஒருவர் இல்லை. இது குறித்து அவதானம் செலுத்தி காலத்தை செலவிடுவது அர்த்தமற்ற வேலை எனவும் கூறினார்.  

 

TOTAL VIEWS : 1280
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
n5tlg
  PLEASE ENTER CAPTA VALUE.