வெளியிடங்களுக்கான புகையிரதங்கள் ஓடவில்லை
2017-12-07 12:45:26 | General

புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக, இன்று காலை பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த, தூரப் பிரதேசங்களுக்கான சில புகையிரதச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிரத சாரதிகளுக்கான உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடைமுறை போன்ற விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளமையே இதற்குக் காரணம் என, புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

TOTAL VIEWS : 455
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
6smcf
  PLEASE ENTER CAPTA VALUE.