புதிதாக உதயமாகிறது முஸ்லிம் கூட்டமைப்பு
2017-12-10 14:12:05 | Leftinraj

இலங்கை முஸ்லிம் மக்களின் நீண்டகால அபிலாசைகளை நிவர்த்தி செய்வதை நோக்காகக் கொண்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று உதயமாவதாக தகவல் வெளியாகியுள்ளது..

இக்கூட்டமைப்பை அறிவிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் ரிசாட் பதியுதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எம்.ரி. ஹசன் அலி மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஒன்றிணைந்தே இப் புதிய கூட்டமைப்பு இன்று பிரகடனப்படுத்தவுள்ளது.

சிறுபான்மை சமூகமான தமிழர்களின் நலனுக்காக பல தமிழ்க் கட்சிகள் பகை மறந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக ஓரணியில் திரண்டிருப்பதைப் போல முஸ்லிம் கட்சிகளும் ஒரு கூட்டமைப்பாக உருவாக வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட காலமாக முஸ்லிம்இ சிவில் சமூகத்தினால் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை நிறுவுவதற்காக முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் ஒருசில முஸ்லிம் கட்சிகள் மட்டுமே அதற்கு இணக்கம் தெரிவித்தன. அந்த அடிப்படையிலேயே முதற்கட்டமாக இரு கட்சிகளை உள்ளடக்கிய ஒரு முஸ்லிம் கூட்டமைப்பு நிறுவப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

TOTAL VIEWS : 552
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xw0cz
  PLEASE ENTER CAPTA VALUE.