காலி அரச அதிபர் அலுவலக இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்; பாகிஸ்தானிலிருந்து நடத்தப்பட்டது
2017-05-16 17:41:13 | General

காலி மாவட்டச் செயலாளர் அலுவலகத்தின் இணையத்தளம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எனினும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினம் உறுதியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு குழுவினரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காலி மாவட்டச் செயலாளர் அலுவலக இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத், இஸ்லாம் மதத்திற்கும் ஜிந்தாபாத், முஸ்லிம்களுக்கு ஜிந்தாபாத், பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஜிந்தாபாத் மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. குழுவிற்கும் ஜிந்தாபாத் என அந்த இணையத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


இந்த ஊடுருவல் குழுவினரால் மேற்படி இணையத்தளம் முடக்கப்பட்ட பின்னர் அதில் பதிவொன்றை வெளியிட்டுள்ள நிலையில், அதில் காஷ்மீர், சிரியா மற்றும் பலஸ்தீன ஆகிய நாடுகள் விடுவிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.


மொஹமட் பிலால் என்ற குழுவினரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

TOTAL VIEWS : 1052
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
sjo6a
  PLEASE ENTER CAPTA VALUE.