ஆசிரியர் நியமனம் பெற்ற பலர் அதன் பின் செய்த தில்லுமுல்லு
2017-04-07 10:19:48 | General

-த.வினோயித்-

வட மாகாண பாடசாலைகளுக்கு அண்மையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பலர் தமக்கு நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளுக்கு செல்லாமல், தமது  இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் நியமனம் பெற்றுள்ளதாக வட மாகாண சபையில் நேற்று சுட்டிக்காட்டப்பட்டது.

இது எவ்வாறு நடந்தது? அவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மாற்றி வழங்குவதற்கு சிபார்சு செய்த அரசியல்வாதிகள் யார்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

பல பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளில் 14 நாட்களுக்குள் நியமனத்தை பொறுப்பேற்க வேண்டும் என்பது நியதி. ஆனால் நியமனம் பெற்ற பலர் அவ்வாறு கடமையைப் பொறுப்பேற்கவில்லை.

எனவே அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களுடைய நியமனத்தை இரத்து செய்ய வேண்டும். அந்த வெற்ளிடத்திற்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க வேண்டும் எனவும் சபையில் கோரப்பட்டது.

வட மாகாண சபையின் 90 ஆவது நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்படி பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பேசப்படடது.

வடமாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் வழங்க்ப்பட்ட பாடசாலைகளுக்குப் பதில் தமது வசதிக்கேற்ப வீடுகளுக்கு அருகில் உள்ள நியமனத்தைப் பெற்றுள்ளனர். இது எவ்வாறு நடந்தது? என மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கேள்வி எழுப்பி இந்த இது குறித்த விவாதத்தை ஆரமபித்தார்.

வட மாகாணத்தில் அதிகளவு ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள கல்வி வலயமாக வலிகாமம் கல்வி வலயம் உள்ளது. அதிகளவு ஆசிரியர்களை மாகாணத்திற்கு வழங்கும் வலிகாமம் கல்வி வலயத்தில் 408 ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை.

புதிதாக ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பலர் தமக்கு நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளில் நியமனத்தை பொறுப்பேற்கவில்லை. மாறாக தமக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் நியமனத்தை பொறுப்பேற்றுள்ளனர். இதற்கு காரணம் யார்? 

அவர்கள் தமக்கு விரும்பிய பாடசாலையில் நியமனம் பெறுவதற்கு சிபார்சு வழங்கிய அரசியல்வாதி யார்? என் பதை வெளிப்படுத்தவேண்டும் எனவும் கஜதீபன் கோரினார்.

கடந்தகாலத்தில் அரச இயந்திரத்தை தவறாக பயன்படுத்தினார்கள் என குற்றஞ்சாட்டிய நாம் அவர்களை விடவும் மோசமாக இந்த அரச இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றோம் எனவும் கஜதீபன் குற்றஞ்சாட்டினார். 

இந்நிலையில் வடமாகாணத்தில் சித்த சுவாதீனமுற்ற 500 ஆசிரியர்களை நாங்கள் பணி யில் வைத்திருக்கின்றோம். அவர்களை வீட்டுக்கு ஆனுப்பிவிட்டு அந்த வெற்றிடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமியுங்கள் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரினார்.

இதேவேளை, நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளில் நியமனத்தை பொறுப்பேற்காத பட்டதாரி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து அந்த இடத்திற்கு காத்திருப்பு பட்டியலில் 
உள்ளவர்களை நியமனம் செய்யும்படி அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் கேட்டு கொண்டார்.

TOTAL VIEWS : 244
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
m4egt
  PLEASE ENTER CAPTA VALUE.