சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் தொடரும்
2017-08-11 22:24:17 | General

சமுர்த்தி அனுகூலங்களைக் குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

சமுர்த்தி நன்மைகள் பெறத் தகுதியுடைய, ஆனால் அது வழங்கப்படாத, பெருந் தொகையானோர் நாட்டில் காணப்படுவதுடன், அவர்களுக்குப் புதிதாக அந்த வரப்பிரசாதங்களை வழங்குவதனை தவிர்த்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஏற்கனவே நன்மைகளைப் பெறுபவர்களின் சமுர்த்திக் கொடுப்பனவுகள்
 நீக்கப்படமாட்டாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை காலை எம்பிலிப்பிட்டிய கம்உதாவ விளையாட்டரங்கில் 
நடைபெற்ற வளவை வலய விவசாய மக்களுக்கு 5000 காணி உறுதிகளை வழங்கும்  நிகழ்வில் உரையாற்றும்போதே  ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன 
இந்த உறுதிமொழியை வழங்கினார்.

சமுர்த்தி  நன்மைகளை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்வேறு அரசியல் தூண்டுதல்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் எந்தவித உண்மையும் இல்லையென்று தெரிவித்த  ஜனாதிபதி, பொதுமக்களின் நன்மைகளை கருதியே தற்போதைய அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளுமெனவும் தெரிவித்தார்.

TOTAL VIEWS : 304
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1wpbp
  PLEASE ENTER CAPTA VALUE.