திட்டமிட்டபடி பரீட்சைகள்
2017-06-13 18:56:39 | General

ந.ஜெயகாந்தன்


5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகியன திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுமெனவும் ஒத்திவைப்பதற்காக எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களை கருத்திற்கொண்டு குறித்த பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படலாம் என கூறப்பட்ட போதும், அவ்வாறாக ஒத்திவைக்குமாறு அறிவிப்போ அல்லது கோரிக்கையோ விடுக்கப்படவில்லையெனவும் இதன்படி திட்டமிட்ட தினங்களில் அந்தப் பரீட்சைகள் நடக்குமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 2 ஆம் திகதி வரை க.பொ.த உயர்தரப்பரீட்சை நடைபெறவுள்ளதுடன், ஆகஸ்ட் 20 ஆம் திகதி 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

TOTAL VIEWS : 680
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ycp5u
  PLEASE ENTER CAPTA VALUE.