ஊர்காவற்றுறை; பெண் கொலை இரத்த மாதிரியை பரிசோதனை
2017-03-21 10:54:22 | Kobi

                                        -க.ஹம்சனன்- 

ஊர்காவற்றுறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பவதிப் பெண்ணின் கணவர் மற்றும் அயல் வீட்டாரின் இரத்த மாதிரிகளைப் பெற்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளிக்க யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் பணிப்புரை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் வீட்டில் தனித்திருந்த ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்திருந்தனர்.  இந்த வழக்கு விசாரணைஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றது.

நேற்று திங்கட்கிழமை இவ்வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. கைதான இரண்டு சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தபட்டனர். 

அத்துடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரும் அவர்களது அயல் வீட்டுக்காரரும் நீதிமன்ற அழைப்பின் பெயரில் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். 
இதன்போது இவ்வழக்கு தொடர்பான விசாரணையை முன்னெடுத்து செல்வதற்கு ஏதுவாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் மன்றில் முன்னிலையாகியிருந்த அயல் வீட்டுக்காரர் ஆகியோரது இரத்த மாதிரிகளைப் பெற்று மரபணுப் பரிசோதனை செய்யவேண்டியுள்ளது. அதற்கு மன்றி அனுமதி வழங்க வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸார் கோரினர்.

இதனைத் தொடர்ந்து பெண்ணின் கணவர் மற்றும் மற்றைய நபரிடமும் மரபணுப் பரிசோதனைக்கு இரத்த மாதிரியை பெற்றுக்கொள்வதற்கான சம்மதத்தை மன்று பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் இவ்வருவரும் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலையாகுமாறு மன்றானது கட்டளையை பிறப்பித்தது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி குறித்த இரு நபர்களிடமும் பெற்றுக்கொள்ளும் டி.என்.ஏ இரத்த மாதிரியை உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமோ அல்லது அவரது பிரதிநிதியிடமோ கையளிக்க வேண்டும் எனவும் நீதிவான்  பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் இவ்வழக்கு விசாரனzயை நாளை புதுன்கிழமை வரை ஒத்திவைத்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

இதேவேளை கடந்த வழக்கு தவனையின் போது குறித்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரின் இரத்த மாதிரியை இன்று செவ்வாய்க்கிழடை பெற்றுக்கொள்வதற்கான அவரை யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்த சிறைச்சாலை அதிகாரிக்கு நீதிவான் கட்டளை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 373
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
l8nvq
  PLEASE ENTER CAPTA VALUE.